'இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீதி'....வைரலாகும் நடிகை நந்திதாவின் பதிவு


Nandita Shankara reacts to sexual offender Savads arrest
x
தினத்தந்தி 22 Jun 2025 1:30 PM IST (Updated: 22 Jun 2025 1:30 PM IST)
t-max-icont-min-icon

நடிகை நந்திதாவிடம் ஆபாச சைகையில் ஈடுபட்டதற்காக சவத் கைது செய்யப்பட்டிருந்தார்

திருவனந்தபுரம்,

பேருந்தில் நடிகையிடம் ஆபாச சைகையில் ஈடுபட்டு கைதான வடகரையைச் சேர்ந்த சவத், அதே வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு நடிகை நந்திதா மஸ்தானி பதிலளித்திருக்கிறார்.

கடந்த 2023-ம் ஆண்டு இதேபோன்று நடிகை நந்திதாவிடம் ஆபாச சைகையில் ஈடுபட்டதற்காக சவத் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவருக்கு அனைத்து கேரள ஆண்கள் சங்கம் மாலை அணிவித்து வரவேற்றது. இதனால் இந்த சம்பவம் சர்ச்சையானது.

நந்திதாவின் புகார் போலியானது என்றும், சவத்தை வேண்டுமென்றே சிக்க வைப்பதற்காக இப்படி செய்ததாகவும் விமர்சனம் எழுந்தது..

இதற்கிடையில், கடந்த 14 அன்று மலப்புரத்திற்குச் செல்லும் பேருந்தில் ஒரு பெண்ணைத் துன்புறுத்தியதாகக் கூறி சவத் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

சவத் கைது செய்யப்பட்டநிலையில், நடிகை நந்திதா ''2ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்துள்ளது" என்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story