நானி படத்தில் முதல்முறையாக நடிக்கும் ஜான்வி கபூர்?

ஜுனியர் என்.டி.ஆருடன் ’தேவாரா’ படத்திலும், ராம் சரண் படத்திலும் ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.
Nani and Janhvi Kapoor to team up for the first time in the former’s 33rd film
Published on

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஹாய் நான்னா. அதனைத்தொடர்ந்து, தற்போது விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தில் நடித்து வருகிறார். இதில், நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

சமீபத்தில், நானியின் 33-வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, ஸ்ரீகாந்த் ஒடேலா இப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கு முன்னர் நானி நடித்த 'தசாரா' படத்தையும் இவர்தான் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நானியின் 33-வது படத்தில் ஜான்விகபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மையானால் முதல்முறையாக நானி படத்தில் ஜான்வி கபூர் நடிப்பார். மேலும், இது ஜான்வி கபூர் நடிக்கும் 3-வது தெலுங்கு படமாகவும் அமையும். இவர் ஜுனியர் என்.டி.ஆருடன் தேவாரா படத்திலும், ராம் சரண் படத்திலும் நடித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com