சூர்யாவின் 'ரெட்ரோ' படத்துடன் மோதுவது குறித்து பேசிய 'ஹிட் 3' நடிகர் நானி

2 படங்கள் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
Nani talks about clashing with Suriya's 'Retro'
Published on

ஐதராபாத்,

நானி நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ஹிட் 3. இதில் நானிக்கு ஜோடியாக கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். வருகிற 1-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.

இதேநாளில்தான் சூர்யாவின் 'ரெட்ரோ' படமும் வெளியாக இருக்கிறது. இதனால் 2 படங்கள் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், ஹிட் 3 படத்தின் புரமோசனில் நானியிடம் சூர்யாவின் 'ரெட்ரோ' படத்துடன் பாக்ஸ் ஆபீசில் மோதுவது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர் இரு படங்களும் வெற்றிபெற வாழ்த்துவதாக கூறினார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ரெட்ரோ' படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com