'கார்த்தி 29' படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் நானி


கார்த்தி 29 படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் நானி
x
தினத்தந்தி 25 Jun 2025 9:00 PM IST (Updated: 9 July 2025 9:43 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக உள்ளது.

சென்னை,

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. காதல், கமர்ஷியல், ஆக்சன் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த 'பொன்னியின் செல்வன், விருமன், சர்தார்' ஆகிய திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'மெய்யழகன்' படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக, நடிகர் கார்த்தி, நலன் குமாராசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்திலும், பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் 'சார்தார் 2' படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய படத்தில் நடிக்க உள்ளார். இது கார்த்தியின் 29-வது படமாகும். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு 'கார்த்தி 29' என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இப்படம் கடல் பின்னணியில் நடக்கும் வெறித்தனமான கேங்ஸ்டர் கதையில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகரான நானி கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஏற்கனவே கார்த்தி நடிகர் நானியில் 'ஹிட் 3' படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story