அந்த இயக்குனருடன் மீண்டும் பணியாற்ற விரும்பும் நானி

நானி தற்போது 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
Nani wants to work with that director again
Published on

சென்னை,

தமிழில் 'நான் ஈ' படத்தின் மூலம் பிரபலமானவர் நானி. இவர் தற்போது, விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகியது.

இப்படம் வரும் 29-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், படக்குழு புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுவருகிறது. அதன்படி, சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நானி, விவேக் ஆத்ரேயா உடன் மீண்டும் பணியாற்ற விரும்புவதாக கூறினார். இந்த கூட்டணி இதற்கு முன்னதாக கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'அடடே சுந்தரா' என்ற படத்தில் இணைந்து பணியாற்றியது.

இப்படத்தில் நானிக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்திருந்தார். மேலும், இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. நானி கூறியதுபோல் மீண்டும் இணைந்தால் அது அவர்களது 3-வது படமாக இருக்கும். இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com