நானியின் அடுத்த படத்தை தயாரிக்கும் 'புஷ்பா' பட தயாரிப்பு நிறுவனம்?

’டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தியுடன் நானி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.
Nani’s next to be produced by Mythri Movie Makers
Published on

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் தற்போது கைவசம் பல படங்களை வைத்திருக்கிறார். அதன்படி, தற்போது இவர் நடித்து வரும் படம் ஹிட் 3. இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி வெளியாக உள்ளது.

இது முடிந்ததும், அவர் ஸ்ரீகாந்த் ஒடேலாவின் 'தி பாரடைஸ்' படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இது மட்டுமில்லாமல், ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து 'டான்' படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தியுடன் நானி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், இந்த திட்டம் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டதாகவும் புஷ்பா படத்தை தாயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை பெரிய அளவில் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com