3 நாட்களில் ரூ.136 கோடி வசூல் குவித்த நானியின் “தி பாரடைஸ்”

தாய் - மகன் பாசத்தை அடிப்படையாக கொண்ட ஆக்ஷன் கதையான ‘தி பாரடைஸ்’ படம் உருவாகியுள்ளது.
3 நாட்களில்  ரூ.136  கோடி வசூல் குவித்த நானியின் “தி பாரடைஸ்”
Published on: 

நானியின் ‘தி பாரடைஸ்’ படம் 3 நாட்களில் ரூ.136 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

‘தி பாரடைஸ்’

நானி நடிப்பில் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தசரா’. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி தனது 33-வது படமான ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், ‘தசரா’வைப் போலவே நானி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நாயகி கயாடு லோஹர்

அனிருத் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 24-ம் தேதி வெளியானது. இதில் நாயகியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். மேலும் மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சிறப்புப் பாடலில் கீர்த்தி சுரேஷ்

‘தசரா’ படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ், ‘தி பாரடைஸ்’ படத்தில் சிறப்புப் பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார். ‘யேஷானகுலா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் இணையத்தில் வைரலானது.

படத்தின் 3 நாள் வசூல்

தாய் - மகன் பாசத்தை அடிப்படையாக கொண்ட ஆக்ஷன் கதையான இப்படம் உருவாகியுள்ளது. பெரும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், நல்ல வசூல் செய்து வருகிறது. அந்த வகையில், இந்த படம் 3 நாட்களில் ரூ.136 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com