நானியின் “தி பாரடைஸ்” படத்தின் புதிய அறிவிப்பு

அனிருத் இசையில் உருவாகி வரும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் 2026 மார்ச் 26ம் தேதி வெளியாகவுள்ளது.
நானியின் “தி பாரடைஸ்” படத்தின் புதிய அறிவிப்பு
Published on

நானி, கீர்த்தி சுரேஷ் , சமுத்திரகனி, டாம் சாக்கோ போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து அறிமுக இயக்குநரான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளிவந்த படம் தசரா. தசரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமாக தி பாரடைஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது. நானியின் வித்தியாசமான தோற்றம், உடல் பாவனை என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தி பாரடைஸ்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. அனிருத் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, ஸ்பானிஷ், ஆங்கிலத்திலும் 2026 மார்ச் 26ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தின் அப்டேட் நாளை காலை 10.08 மணிக்கும் மாலை 5.04 மணிக்கும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நானியின் நடிப்பில் கடைசியாக வெளியான ஹிட் 3 ரூ.100 கோடி வசூலை தாண்டியது குறிப்பிடத்தக்கது. .

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com