நரேஷ் ஐயர் கூட அப்படித்தான்...ஏ.ஆர்.ரகுமான் சொன்ன தகவல்

சில சமயம் நன்றாக பாடுபவர்களை கூட போட்டியில் இருந்து வெளியேறுவார்கள் என ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.
நரேஷ் ஐயர் கூட அப்படித்தான்...ஏ.ஆர்.ரகுமான் சொன்ன தகவல்
Published on

சென்னை,

தனக்கு வெற்றியாளர்களைவிட, பங்கேற்பாளர்களை பிடிக்கும் என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் இதை தெரிவித்தார்.

Also Read
“மூன்வாக்” படத்தின் அனைத்து பாடல்களையும் பாடிய ஏ.ஆர். ரகுமான்
நரேஷ் ஐயர் கூட அப்படித்தான்...ஏ.ஆர்.ரகுமான் சொன்ன தகவல்

அவர் கூறுகையில், ’ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு. பாடல் போட்டிகளில் யார் எல்லாம் தோற்று போகிறார்கள் என கவனிப்பேன். சில சமயம் நன்றாக பாடும் நபர்களை கூட வெளியேற்றுவார்கள். எனக்கு வெற்றியாளர்களைவிட, பங்கேற்பாளர்கள் அனைவரையும் பிடிக்கும்.

நரேஷ் ஐயர் கூட அப்படித்தான். 23 வயதில் ஒரு போட்டியில் தோற்றார். ஆனால் அவரின் குரலில் இருந்த தரம் எனக்கு பிடித்திருந்தது. அவரை அழைத்து 'நீ தோற்றுவிட்டாய், ஆனால் உனக்கு ஒரு நல்ல செய்தி சொல்கிறேன். எனக்கு ட்ராக் பாட கிளம்பி சென்னை வா' என்றேன். அவருக்கு முதல் பாடலிலேயே (Roobaroo-Rang De Basanti) தேசிய விருது கிடைத்தது’ என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com