காதலனை கரம் பிடித்த பிரபல பாலிவுட் நடிகை?


Nargis Fakhri Marries Boyfriend Tony Beig In Los Angeles
x

லாஸ் ஏஞ்சல்ஸில் இந்த திருமணம் நடந்ததாக தெரிகிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

பிரபல பாலிவுட் நடிகை நர்கிஸ் பக்ரி. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தியில் 'மெட்ராஸ் கபே', 'ராக் ஸ்டார்', 'ஹவுஸ்புல்-3' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் பிரஷாந்துடன் 'சாகசம்' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இவர் அமெரிக்கத் தொழிலதிபர் டோனி என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் திருமணம் செய்துகொண்டதாகசசெய்தி வெளியாகி இருக்கிறது.

லாஸ் ஏஞ்சல்ஸில் இந்த திருமணம் நடந்ததாக தெரிகிறது. இதில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டு இருக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன் ஒரு பேட்டியில் தனது வாழ்க்கையில் ஒருவர் புதிதாக வந்திருப்பதாகவும் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்த நர்கிஸ், அவர் பற்றிய விவரத்தைச் சொல்ல மறுத்திருந்தார்.

1 More update

Next Story