நடிகர் சங்க தலைவர் நாசருக்கு பொன் வண்ணன் எழுதிய கடிதம் முழு விவரம்

கடந்தகால நிர்வாகிகளை குறைசொல்லி, பொறுப்புக்கு வந்த நாம், அதே தவறை செய்வது சரியா..? என நடிகர் சங்க தலைவர் நாசருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பொன்வெண்னன் கேட்டு உள்ளார்.
நடிகர் சங்க தலைவர் நாசருக்கு பொன் வண்ணன் எழுதிய கடிதம் முழு விவரம்
Published on

சென்னை,

விஷால் நடிகர் சங்க பொதுச் செயலாளராக பதவி வகிக்கிறார். திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், விஷால் திடீர் என்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார். இதை யடுத்து அவர் அரசியலில் ஈடுபடுவதற்கு தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த சேரன், டி.ராஜேந்தர் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்திலும் எதிர்ப்பு கிளம்பியது.

தயாரிப்பாளர் சங்க கவுரவ செயலாளராக இருந்த கே.ஈ.ஞானவேல் ராஜா கடந்த 4-ந்தேதி அவருடைய பதவியை ராஜினாமா செய்தார். வினியோகஸ்தர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாலும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் இந்த முடிவை எடுத்து இருப்பதாக ராஜினாமா கடிதத்தில் கூறி இருந்தார்.

இந்த நிலையில் நடிகர் பொன்வண்ணன் நடிகர் சங்க துணை தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இதுபற்றி அவர் நடிகர் சங்க தலைவர் நாசருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

நமது செயலாளர்ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்திருப்பதை தொலைக் காட்சியில் பார்த்து அதிர்ச்சியடைந் தேன்.

கடந்தகால நிர்வாகிகளை இதை காரணம் காட்டி, குறைசொல்லி, பொறுப்புக்கு வந்த நாம், அதே தவறை செய்வது சரியா..? இதனால் எதிர்காலத்தில் அரசியலற்ற நடிகர் சங்க தலைமை என்ற நம்பிக்கையே அடிபட்டு போகிறது.

வருகிற ஐனவரி 7-ம் தேதி மலேசியாவில் நடக்கிற கலை நிகழ்ச் சிக்கு 200-க்கு மேற்பட்ட நடிகர்களை அழைத்து போக வேண்டியுள்ளது. நிகழ்ச்சி பற்றி பல விவாதங்கள் செய்ய வேண்டியுள்ளது.

அதையெல்லாம் உடனிருந்து திட்டமிடுவதை விட்டு, தேர்தல் களத்திற்கு சென்று விட்டால், இங்கே பொதுச் செயலாளர் வேலையை, முடிவை யார் எடுப்பார்கள்?

எனவே, இதற்குபின் இப்பொறுப்பில் இருந்தால், எதிர் காலத்தில் என் தனித் தன்மையை இழப்பதுடன், முரண்பாடான மன நிலை யிலும் செயல்பட வேண்டி வரலாம்.

அது தற்போதைய நிர்வாக செயல்பாட்டிற்கு தடையாக மாறும். உடன்பாடில்லாத விசயங்களில் மவுனம் காப்பது, அல்லது வீண் விவாதங்களில் ஈடுபடுவது இரண்டுமே ஆரோக்கியமான தல்ல.! எனவே துணைத் தலைவர்பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com