'யூடியூப்'பில் வெளியாகும் தேசிய விருது பெற்ற குறும்படம்

இந்த படம் சர்வதேச பட விழாக்களில் விருதுகளை பெற்றுள்ளது.
'யூடியூப்'பில் வெளியாகும் தேசிய விருது பெற்ற குறும்படம்
Published on

சென்னை,

கந்தர்வன் எழுதிய 'சனிப்பிணம்' என்ற சிறுகதையை மையமாக வைத்து நவீன் இயக்கத்தில் 'லிட்டில் விங்ஸ்' என்ற குறும்படம் தயாரானது. ராம்ஜி, மணிமேகலை நடித்துள்ள இந்த படம் சர்வதேச பட விழாக்களில் விருதுகளை அள்ளியது.

71-வது தேசிய விருதுகள் பட்டியலில் இந்த படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதும் கிடைத்தது. படத்தின் ஒளிப்பதிவாளர் மறைந்த சரவண மருதுவுக்கு கிடைத்த கவுரவமாக இது கருதப்பட்டது. தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை குவித்த இந்த படம் யூடியூப்பில் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி, மாலை 5 மணி முதல் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் யூடியுப் சேனலில் ஒளிபரப்பாகிறது.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் நவீன் கூறும்போது. "பல சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டு வந்ததால், இப்படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. பெரிய நடிகர்கள் இல்லாத இந்த படத்தை ஓ.டி.டி. தளங்களில் வெளியிட முயற்சி செய்தோம். அது நடக்கவில்லை. அதன் பிறகு யூடியூப்பில் வெளியிடுகிறோம். இதற்கு உறுதுணையாக இருந்த டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் இயக்குனர் ராஜூ முருகன் உள்ளிட்டோருக்கு எனது நன்றி" என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com