தொழில் அதிபராகும் நேஷனல் கிரஷ்


தொழில் அதிபராகும் நேஷனல் கிரஷ்
x

நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்த கட்டமாக தொழிலில் முதலீடு செய்ய முடிவு எடுத்திருக்கிறார்.

சென்னை,

'நேஷனல் கிரஷ்' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் ராஷ்மிகா மந்தனா. தென்னிந்திய திரை உலகில் மட்டும் இன்றி இந்தி திரை உலகிலும் அறிமுகமாகி நடித்துவரும் ராஷ்மிகா மந்தனா அனிமல், புஷ்பா- 2 படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார்.

திரை உலகில் அதிர்ஷ்ட கதாநாயகியாக இருந்து வரும் ராஷ்மிகா கைவசம் பல படங்கள் இருந்து வருகிறது. இரவு பகலாக அங்கும் இங்கும் பறந்து படப்பிடிப்பில் பங்கேற்று வரும் ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.60 கோடி இருக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

திரை உலகில் கடும் பிசியான நடிகையாக இருந்து வரும் ராஷ்மிகா மந்தனா அடுத்த கட்டமாக தொழிலில் முதலீடு செய்ய முடிவு எடுத்திருக்கிறார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவரது தாயாருக்கு வீடியோ கால் மூலம் தெரிவித்ததை பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில், இன்று நான் ஒரு மிக முக்கியமான படப்பிடிப்பிற்கு செல்கிறேன். நீங்கள் சொன்னது போல் தொழிலை நான் தொடங்குவேன் என கூறியிருக்கிறார். அவருக்கு தாயார் சுமன் மந்தனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொழில் தொடங்க போகிறேன் என்று கூறியுள்ள ராஷ்மிகா மந்தனா எந்த தொழிலில் முதலீடு செய்யப் போகிறார் என்ற விபரத்தை வெளியிடவில்லை. திரை உலகில் முன்னணி பிரபலங்கள் பலர் ரியல் எஸ்டேட், ஓட்டல்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருவது சமீப காலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story