69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: விருதுகளை அள்ளிய ஆர்ஆர்ஆர்

தேசிய திரைப்பட விருதுகளுக்கான ஜூரி உறுப்பினர்கள், விருது பெற்றவர்களின் பட்டியலை மத்திய மந்திரி அனுராக் தாகூரிடம் ஒப்படைத்தனர்.
69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: விருதுகளை அள்ளிய ஆர்ஆர்ஆர்
Published on

புதுடெல்லி,

இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டு வழங்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் அடிப்படையிலான திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

69-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான ஜூரி உறுப்பினர்கள், விருது பெற்றவர்களின் பட்டியலை மத்திய மந்திரி அனுராக் தாகூரிடம் ஒப்படைத்தனர்.

இதை தொடர்ந்து மத்திய மந்திரி அனுராக் தாகூர் தேசிய திரைப்பட விருதுகள் பெற்றவர்கள் விவரத்தை அறிவித்தார்.

தாதாசாகேப் பால்கே விருது இன்று அறிவிக்கப்படாது. அது பின்னர் அறிவிக்கப்படும்.

திரைப்பட விருதுகள் பெற்றவர்கள் விவரம் வருமாறு :-

சிறந்த நடனம் : ஆர்ஆர்ஆர்( பிரேம் ரஷித்)

சிறந்த சண்டை பயிற்சி: ஆர்ஆர்ஆர் ( கிங் சாலமன்)

தொழில் நுட்பம் : ஆர்ஆர்ஆர் ( ஸ்ரீனிவாஸ்)

கருவறை ஆவணப்படத்திற்காக ஸ்ரீகாந்த் தேவாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது

சர்தார் உதம் சிறந்த இந்தி படமாகவும், செலோ ஷோ சிறந்த குஜராத்தி படமாகவும், 777 சார்லி சிறந்த கன்னட படமாகவும் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளது.

சிறந்த பிண்ணனி பாடகிக்கான பிரிவில் 'இரவின் நிழல்' திரைப்படத்தில் "மாயவா தூயவா" பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

மணிகண்டன் இயக்கிய 'கடைசி விவசாயி' படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிறந்த தமிழ்படம் - 'கடைசி விவசாயி' (மணிகண்டன்)

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com