தேசிய திரைப்பட அகாடமி விருது சிறந்த துணை நடிகர் ‘மெர்சல்’படத்திற்காக போட்டியாளர்களின் பட்டியலில் விஜய்

இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் தேசிய திரைப்பட அகாடமி வழங்கும் 2018ம் ஆண்டு விருதுக்கான போட்டியில் சிறந்த துணை நடிகர் விருதுக்கு ‘மெர்சல்’ படத்திற்காக விஜய் போட்டியாளர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். #NationalFilmAwards #Mersal
தேசிய திரைப்பட அகாடமி விருது சிறந்த துணை நடிகர் ‘மெர்சல்’படத்திற்காக போட்டியாளர்களின் பட்டியலில் விஜய்
Published on

லண்டன்

இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் தேசிய திரைப்பட அகாடமி வழங்கும் 2018ம் ஆண்டு விருதுக்கான போட்டியில் சிறந்த துணை நடிகர் விருதுக்கு 'மெர்சல்' படத்திற்காக விஜய் போட்டியாளர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

, 'மெர்சல்' திரைப்படமும் சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டியில் இடம் பிடித்துள்ளது.

சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டியில் 'மெர்சல்' படத்துடன் பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி, ஸ்வீடன், சிலி, தென்னாப்பிரிக்கா, லெபனான ஆகிய நாடுகளின் படங்களும் போட்டியிடுகின்றன. போட்டியாளர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆன்லைன் வாக்குப்பதிவு நேற்று முதல் ஆரம்பமானது.

வரும் 20ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.விருது பெற்றவர்களின் விவரம் மார்ச் மாதம் 28ம் தேதி நடைபெற உள்ள தேசிய திரைப்பட விருதுகள் 2018 விழாவில் அறிவிக்கப்பட உள்ளது.

தேசிய திரைப்பட அகாடமி 1999ம் ஆண்டு அமைக்கப்பட்டது. திரையுலகத்தினருக்கான வளர்ச்சியில் அந்த அமைப்பு ஈடுபடுகிறது. பல திரைப்பட விழாக்கள், காட்சிகள், மாநாடுகள், பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை இந்த அமைப்பு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடத்தி வருகிறது.

#NationalFilmAwardsUK #Mersal #BestForeignLanguageFilm @actorvijay

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com