’பிடித்த நடிகை … ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத படம்’ - நானியை கவர்ந்த ஹீரோயின்

நானி ஹீரோவாக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் சிறந்து விளங்கி வருகிறார்.
’பிடித்த நடிகை … ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத படம்’ -  நானியை கவர்ந்த ஹீரோயின்
Published on

ஐதராபாத்,

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானி தற்போது தொடர்ச்சியாக பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஹீரோவாக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் சிறந்து விளங்கி வருகிறார். தனது வால் போஸ்டர் சினிமா பேனரில் பல படங்களை தயாரித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் தயாரித்த ’கோர்ட்டு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, நானி ஹீரோவாக ’தி பாரடைஸ்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குகிறார். இதில் நானி வித்தியாசமான லுக்கில் தோன்றுகிறார்.

Also Read
ஜனநாயகன் லீக்; திரையுலகில் நடக்கக்கூடாத குற்றச்செயல்.. - சுரேஷ் காமாட்சி வேதனை
’பிடித்த நடிகை … ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத படம்’ -  நானியை கவர்ந்த ஹீரோயின்

இதற்கிடையில், நானி, மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து உருக்கமாக பேசியுள்ளார். “எனக்கு நடிகை ஸ்ரீதேவியை ரொம்ப பிடிக்கும். அவர் நடித்த ’க்சன க்சணம்’(Kshana Kshanam) படத்தை பல முறை பார்த்திருக்கிறேன். எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்க தோன்றும் படம் அது” என்று தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com