நவீன் சந்திரா நடிக்கும் 51வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு

ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படத்தில் ஹரிபிரியா ரோஷிணி, பால சரவணன், காளி வெங்கட் நடிக்கின்றனர்.
நவீன் சந்திரா நடிக்கும் 51வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு
Published on: 

ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தமிழில், பிரம்மன், சிவப்பு, பட்டாஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், லெவன் உட்பட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நவீன் சந்திரா. இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

‘லெவன்’ படத்தில் சிறப்பான நடிப்பிற்காக பாராட்டுகளை குவித்த நவீன் சந்திரா, தான் நடிக்கும் பாத்திரங்களை மிகவும் கவனமாகத் தேர்வு செய்து வருகிறார். அவரது 51-வது படமான இது, ஒரு புதுமையான கதைக் களத்தை மையமாகக் கொண்டுள்ளது.

இயக்குநர், தயாரிப்பாளர், டப்பிங் இயக்குநர் என திரையுலகில் பல்வேறு பரிமாணங்களில் முத்திரை பதித்து வரும் ஆர்.பி. பாலா, முன்னணி ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நவீன் சந்திரா முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.

ஹரிபிரியா ரோஷிணி, பால சரவணன், காளி வெங்கட் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தை ஆர்.பி. பாலா, பி.ஜி. முத்தையா தயாரிக்கின்றனர். சக்தி பாலாஜி இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு நிறைவு

ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்துள்ளது.படம் சிறப்பாக உருவாகியிருப்பதை குழுவினர் அனைவரும் இணைந்து கொண்டாடினர்.

‘என் சி 51’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இதர பணிகளையும் முடித்து படத்தை திரையரங்குகளில் விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com