வீட்டில் இருந்து மனைவி, குழந்தையை வெளியேற்றிய பேட்ட பட நடிகர்

ஆலியா நவாஸுதீனின் பங்களாவுக்கு குழந்தைகள் உடன் செல்ல முற்பட்ட போது தடுதது நிறுத்தப்பட்டு வெளியில் அனுப்பப்பட்டார். அப்போது அதை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக ஆலியா வெளியிட்டு இருக்கிறார்.
வீட்டில் இருந்து மனைவி, குழந்தையை வெளியேற்றிய பேட்ட பட நடிகர்
Published on

தமிழில் ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் வில்லனாக நடித்துள்ள நவாசுதீன் சித்திக் இந்தியில் பிரபல நடிகராக இருக்கிறார். இவரது சொந்த வாழ்க்கை சர்ச்சை நிறைந்ததாக மாறி உள்ளது. நவாசுதீன் சித்திக் மீது அவரது மனைவி அலியா தொடர்ந்து குற்றச்சாட்டுகள் சுமத்தி வருகிறார்.

திருமணமானது முதல் நவாசுதீன் தன்னை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வருவதாக புகார் கூறி வருகிறார். இதுகுறித்து போலீசிலும் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் தன்னையும், தனது குழந்தைகளையும் காவலாளிகளை வைத்து வீட்டில் இருந்து பலவந்தமாக நவாசுதீன் சித்திக் வெளியேற்றி விட்டதாக அலியா புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "என்னிடம் வெறும் 81 ரூபாய் மட்டுமே உள்ளது. இரண்டு குழந்தைகளுடன் எங்கு செல்வது என்று புரியவில்லை. நவாசுதீன் இப்படி செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பெற்ற தந்தையே இப்படி செய்ததை எனது மகளால் ஜீரணிக்க முடியவில்லை. என்னையும், குழந்தைகளையும் நடுத்தெருவில் விட்ட நவாசுதீன் சித்திக்கை சும்மா விடமாட்டேன்'' என்று கூறியுள்ளார். அந்த வீடியோவில் மகள் ரோட்டில் நின்று வீட்டை பார்த்தபடி அழும் காட்சியும் இடம்பெற்று உள்ளது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com