'காதலிக்க விரும்பினால் திருமணம் செய்யாதீர்கள்' - வைரலாகும் 'பேட்ட' பட நடிகரின் பேச்சு

நவாசுதீன் சித்திக் தமிழில் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.
Nawazuddin Siddiqui Says "One Shouldn't Get Married" After Re-Uniting With Wife Aaliya
Published on

மும்பை,

பாலிவுட் சினிமாவில் தனது நடிப்பால் மிகவும் பிரபலமானவர் நவாசுதீன் சித்திக். இவர் நடித்த கேங்க்ஸ் ஆப் வாஸ்ஸேபூர்), தி லஞ்ச்பாக்ஸ், ராமன் ராகவ் 2.0, மற்றும் மாண்டோ போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தன. இவர் நடித்த எட்டு படங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டன.

இவர் தமிழில் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். ஆலியா என்பவரை திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே கடந்த மார்ச் மாதம் நவாசுதீன் சித்திக் மற்றும் மனைவி ஆலியா இருவரும் மனக்கசப்புகளை மறந்து ஒன்றாக இணைந்தனர். 'குழந்தைகளுக்காக ஒன்றாக இணைந்திருக்கிறோம்' என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் 'திருமணத்திற்கு பிறகு தம்பதிகளிடையே காதல் நின்றுவிடும்' என்று நடிகர் நவாசுதீன் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, "திருமணத்திற்கு பிறகு இருவரிடையே இருக்கும் நேசம் குறைய தொடங்குகிறது. ஒருவரையொருவர் சாதாரணமாக எடுத்துக் கொள்ளத் தொடங்குவர். எதிர்பாராத விதமாக நிறைய விஷயங்கள் நடக்கின்றன. எனவே நீங்கள் யாரையாவது காதலித்தாலோ, தொடர்ந்து காதலிக்க விரும்பினாலோ திருமணம் செய்து கொள்ளாதீர்கள்'' என்றார். நடிகர் நவாசுதீனின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com