காது குத்திக்கொண்ட நயன்தாரா... இணையத்தில் வைரலாகும் வீடியோ

நயன்தாரா காது குத்திக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காது குத்திக்கொண்ட நயன்தாரா... இணையத்தில் வைரலாகும் வீடியோ
Published on

சென்னை,

'ஐயா' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நயன்தாரா தொடர்ந்து 20 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கிறார். தமிழ் திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார். இவர் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்த ஜவான் படத்தில் நடித்து இந்தி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

தற்போது, யாஷ் நடிக்கும் 'டாக்சிக்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நயன்தாரா நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் நடித்துள்ள 'டெஸ்ட்' படமும், 'மன்னாங்கட்டி சின்ஸ் 1960' படமும் விரைவில் திரைக்கு வர உள்ளன. மலையாளத்தில் நிவின் பாலி-யுடன் 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தற்போது நடிகை நயன்தாரா காது குத்தும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நயன்தாரா 'உன்னால் முடியும் தோழா' என்று கூறி வலியை தாங்கிக்கொண்டு காது குத்திக்கொண்டார். தனது காதுகளில் வைர தோடு போடுவதற்காக இரண்டு இடங்களில் காது குத்திக்கொண்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. 

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com