பிறந்தநாளையொட்டி நயன்தாராவின் அடுத்த பேய் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடித்து வரும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பிறந்தநாளையொட்டி நயன்தாராவின் அடுத்த பேய் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது
Published on

சென்னை,

படங்கள் இயக்குவது மட்டுமன்றி படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் டைரக்டர் விக்னேஷ் சிவன். சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான 'நெற்றிக்கண்' தன்னுடைய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தார். அதனைத் தொடர்ந்து 'கூழாங்கல்', 'ராக்கி' உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு உரிமையையும் கைப்பற்றினார்.

தற்போது விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் டைரக்டர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நயன்தாரா நடித்து வருகிறார். 2015-ம் ஆண்டு வெளியான மாயா படத்தை அஸ்வின் சரவணன் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேய் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கேர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்கிறார். பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், இன்று (நவம்பர் 18) நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு 'கனெக்ட்' என பெயரிடப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com