குழந்தைகளுடன் நெதர்லாந்து சென்ற நடிகை நயன்தாரா.. வைரலாகும் புகைப்படங்கள்


குழந்தைகளுடன் நெதர்லாந்து சென்ற நடிகை நயன்தாரா.. வைரலாகும் புகைப்படங்கள்
x
தினத்தந்தி 30 May 2025 7:11 PM IST (Updated: 30 May 2025 8:28 PM IST)
t-max-icont-min-icon

நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிக்கு உயிர் மற்றும் உலக் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் 'போடா போடி' படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதனையடுத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்தார். இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறினார் விக்னேஷ்.

விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ல் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலகம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

நடிகை நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகள் உடன் ஜாலி டூர் சென்ற புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மூக்குத்தி அம்மன்-2, டாக்சிக், ராக்காயி, டியர் ஸ்டூடன்ட்ஸ், சிரஞ்சீவி 157வது படம் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. இப்படி பிசியாக நடித்த வந்தபோதும் ஓய்வு கிடைக்கும்போது தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரண்டு மகன்களுடன் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் நயன்தாரா.

தற்போது நயன்தாரா தனது குடும்பத்துடன் நெதர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அந்த நாட்டின் பல பகுதிகளுக்கு தங்கள் மகன்களுடன் சென்றபோது எடுத்த புகைப்படம், வீடியோவை இன்ஸ்டாகிராமில் நயன்தாரா வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

1 More update

Next Story