நயன்தாரா படத்தின் தோல்விக்கு விமர்சனம் - பிரபல டைரக்டர் காட்டம்

நயன்தாரா கதாநாயகியாக நடித்த ‘கோல்டு' மலையாள படம் கடந்த மாதம் திரைக்கு வந்து தோல்வி அடைந்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. தோல்விக்கு காரணம் டைரக்டர் அல்போன்ஸ் புத்திரன் என்று விமர்சித்தும் கேலி செய்தும் பலர் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வந்தனர்.
நயன்தாரா படத்தின் தோல்விக்கு விமர்சனம் - பிரபல டைரக்டர் காட்டம்
Published on

நிவின் பாலி நடித்த நேரம், பிரேமம் படங்களை இயக்கி பிரபலமானவர் அல்போன்ஸ் புத்திரன். பிரேமம் படத்தின் வெற்றியால் அதில் நடித்த சாய்பல்லவி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். நயன்தாரா கதாநாயகியாக நடித்த 'கோல்டு' மலையாள படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கி இருந்தார்.

கோல்டு படம் கடந்த மாதம் திரைக்கு வந்து தோல்வி அடைந்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. தோல்விக்கு காரணம் அல்போன்ஸ் புத்திரன் என்று விமர்சித்தும் கேலி செய்தும் பலர் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வந்தனர்.

இதற்கு பதிலடி கொடுத்து அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்டுள்ள பதிவில், ''என்னையும், எனது கோல்டு படத்தையும் தவறாக பேசுகின்றனர். நான் உங்கள் அடிமை இல்லை. என்னை கேலி செய்யவோ, அவமதிக்கவோ உங்களுக்கு உரிமை இல்லை. எனது கோல்டு படத்தை விமர்சிப்பது உங்களுக்கு சரியாக இருக்கலாம். எனக்கு அது நல்லது அல்ல.

உங்களுக்கு பிடித்தால் எனது படங்களை பாருங்கள். கோபத்தை வெளிப்படுத்த எனது சமூக வலைத்தளம் பக்கம் வரவேண்டாம். கீழே விழுந்தாலும் மீண்டும் எழ இயற்கை துணை நிற்கும். தொடர்ந்து இதை செய்தால் வலைத்தளத்தில் இருந்து விலகி விடுவேன்'' என்று காட்டமாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com