‘ரூ.100 கோடி படத்தை தோளில் சுமந்து நடித்துள்ளார் நயன்தாரா!’ - ரெஜினா பாராட்டு

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ரெஜினா கசாண்ட்ரா, நயன்தாராவைப் பாராட்டிப் பேசியுள்ளார்.
‘ரூ.100 கோடி படத்தை தோளில் சுமந்து நடித்துள்ளார் நயன்தாரா!’ - ரெஜினா பாராட்டு
Published on: 

கோவை,

“ரூ.100 கோடி படத்தைத் தனது தோளில் சுமந்து நயன்தாரா நடித்துள்ளார். வேறு எந்தப் பெண்ணாலும் இதைச் செய்ய முடியாது. இது எனக்கு ஊக்கமளிக்கிறது” என்று நயன்தாராவைப் பாராட்டினார்.

‘மூக்குத்தி அம்மன் 2’

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்தில் நயன்தாராவுடன் சினேகா, ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், துனியா விஜய், ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதையடுத்து, படக்குழுவினர் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நவம்பர் 6-ந் தேதி வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘வில்லியாக நடிப்பது புதிதாக இருக்கிறது’

இதன் ஒரு பகுதியாக, கோவையில் நடைபெற்ற ‘மூக்குத்தி அம்மன் 2’ பட நிகழ்ச்சியில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது தனக்குப் புதுமையான அனுபவமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும், படம் வெளியாவதற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறினார்.

மேலும், “ரூ.100 கோடி படத்தைத் தனது தோளில் சுமந்து நயன்தாரா நடித்துள்ளார். வேறு எந்தப் பெண்ணாலும் இதைச் செய்ய முடியாது. இது எனக்கு ஊக்கமளிக்கிறது” என்று நயன்தாராவைப் பாராட்டினார். ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களாக வெளியாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com