தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா படத்தில் நயன்தாரா விலகல்

நயன்தாராவுக்கு பதில் வேறு ஒரு கதாநாயகி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா படத்தில் நயன்தாரா விலகல்
Published on

சென்னை,

தெலுங்கு திரை உலகில் இளம்கதாநாயகர்களுடன் போட்டி போட்டு நடித்து வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் பாலகிருஷ்ணா. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘அகண்டா-2’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. அவரது படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் படங்களாக அமைகின்றன. இதை தொடர்ந்து கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் புதிய படம் உருவாக இருக்கிறது.

படத்தில் கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்கான முதல் தோற்ற போஸ்டர்களும் வெளியானது. பாலகிருஷ்ணாவும் நயன்தாராவும் ஏற்கனவே ஸ்ரீராமராஜ்யம், சிம்ஹா, ஜெய்சிம்ஹா ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் தற்போது நயன்தாராவுக்கு பதில் வேறு ஒரு கதாநாயகி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நயன்தாராவுக்கு பதிலாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com