தீபாவளி பண்டிகையில் நயன்தாரா படம் ஓ.டி.டியில் ரிலீஸ்?

கொரோனாவால் தியேட்டர்கள் பல மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. இதனால் புதிய படங்களை இணைய தளமான ஓ.டி.டியில் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.
தீபாவளி பண்டிகையில் நயன்தாரா படம் ஓ.டி.டியில் ரிலீஸ்?
Published on

கொரோனாவால் தியேட்டர்கள் பல மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. இதனால் புதிய படங்களை இணைய தளமான ஓ.டி.டியில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். விஜய்சேதுபதியின் க.பெ.ரணசிங்கம், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், அனுஷ்காவின் சைலென்ஸ், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமி நடித்துள்ள டேனி உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டியில் வெளியாகி உள்ளன. சூர்யா நடித்துள்ள சூரரை போற்று வருகிற 30-ந் தேதி ஓ.டி.டியில் வருகிறது. தீபாவளி பண்டிகையில் விஷாலின் சக்ரா, சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் ஆகிய படங்களை ஓ.டி.டி தளத்தில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. இந்த நிலையில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்தையும் தீபாவளி பண்டிகையில் ஓ.டி.டி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து படக்குழுவினர் தரப்பில் கூறும்போது மூக்குத்தி அம்மன் படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது நடந்து வருகின்றன. படத்தை ஓ.டி.டியில் வெளியிடுவதா தியேட்டரில் ரிலீஸ் செய்வதா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றனர். மூக்குத்தி அம்மன் கன்னியாகுமரி பகவதி அம்மன் மகிமையை பேசும் பக்தி படமாக தயாராகி உள்ளது. இதில் பகவதி அம்மனாக நயன்தாரா நடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com