நயன்தாராவின் பேய் படம்

நயன்தாரா ‘கனெக்ட்’ என்ற பெயரில் தயாராகி உள்ள பேய் படத்தில் நடித்துள்ளார்.
நயன்தாராவின் பேய் படம்
Published on

இதில் 15 வயது பெண்ணுக்கு தாயாக வருகிறார். நயன்தாரா கணவராக வினய், தந்தை கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளனர். இந்த படத்தை அஸ்வின் சரவணன் டைரக்டு செய்துள்ளார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இடைவேளை இல்லாமல் ஓடக்கூடிய படமாக இது வருகிறது. இதுகுறித்து டைரக்டர் அஸ்வின் சரவணன் கூறும்போது, ''கொரோனா ஊரடங்கு பேய் படமாக இது தயாராகி உள்ளது. நயன்தாராவின் கணவரும், தந்தையும் வெளியே இருக்கும்போது ஊரடங்கு போடப்படுகிறது. இதனால் நயன்தாராவும், அவரது மகளும் மட்டும் வீட்டில் முடங்குகிறார்கள். அப்போது ஒரு பேயிடம் இருவரும் சிக்கிக்கொள்கிறார்கள். வெளியில் இருப்பவர்களுடன் வீடியோ காலில் பேசி பிரச்சினையை சொல்கிறார்கள். பேயிடம் இருந்து எப்படி தப்புகிறார்கள் என்பது கதை. இடைவேளை இல்லாமல் 99 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக இது தயாராகி இருப்பது சிறப்பு அம்சம். 15 வயது பெண்ணுக்கு தாயாக நடிக்க வேண்டும் என்றதும் நயன்தாரா உடனே சம்மதித்தார்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com