'சூர்யா47' பட அப்டேட் கொடுத்த நஸ்ரியா


Nazriya gives an update on the Suriya47 film
x
தினத்தந்தி 19 Dec 2025 8:15 PM IST (Updated: 19 Dec 2025 8:15 PM IST)
t-max-icont-min-icon

`ஆவேஷம்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

சென்னை,

சூர்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவரது 47வது படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. `ஆவேஷம்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் சூர்யாவுடன், பிரேமலு ஹீரோ நஸ்லேன் மற்றும் நடிகை நஸ்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுஷின் ஷ்யாம் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில், நடிகை நஸ்ரியா இப்பட அப்டேட் கொடுத்திருக்கிறார். அவர் கூறுகையில், ‘ஜித்து மாதவன் இயக்கும் 'சூர்யா47' படத்தின் கதைக்களம் மிகவும் புதுமையாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது. பார்வையாளர்களுக்கு இது ஒரு சிறப்பான விருந்தாக அமையும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். சூர்யா சாருடன் பணியாற்றுவதில் நான் மிகவும் உற்சாகமாகவும் பெருமையாகவும் உணர்கிறேன்’ என்றார்.

`ஆவேஷம்' போன்ற ஒரு மாஸ் எனர்ஜியான படத்திற்குப் பிறகு இப்படத்தை இயக்கும் ஜித்து மாதவன், சூர்யாவை எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் காட்டப்போகிறார் என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் ஆவலுடன் காத்திருக்கிறது.

1 More update

Next Story