’என்சி24’ - மீனாட்சி சவுத்ரியின் பர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைப்பு - காரணம் என்ன?

மீனாட்சியின் பர்ஸ்ட் லுக்கை இன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது
சென்னை,
நாக சைதன்யா, இயக்குனர் கார்த்திக் வர்மா தண்டு கூட்டணியில் உருவாகி வரும் புராண திரில்லர் படத்திற்கு தற்காலிகமாக ’என்சி24’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. இதில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார்.
மீனாட்சியின் பர்ஸ்ட் லுக்கை இன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது, ஆனால் தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லாவில் நடந்த சோகம் காரணமாக அதை ஒத்திவைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்த சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்ததாகவும், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், மீனாட்சியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்றும் கூறியுள்ளனர்.
செவெல்லாவில் பஸ் மீது டிப்பர் லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், பஸ்சில் இருந்த 17 பேர் பலியானார்கள்.
’என்சி24’ படத்தில் லாபட்டா லேடீஸ் நடிகர் ஸ்பர்ஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் கீழ் பி.வி.எஸ்.என் பிரசாத் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அஜனீஷ் பி. லோக்நாத் இசையமைக்கிறார்.






