பாலியல் உதவி வேண்டுமா? என நேரடியாகவே கேட்டனர்; பிரபல நடிகரின் பேரன் பேட்டி

இவ்வளவு பணம் கொடு, பதிலுக்கு பாலியல் உதவி கிடைக்கும் என நேரடியாகவே என்னிடம் பேரம் பேசினர் என்று பிரபல நடிகரின் பேரன் அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.
பாலியல் உதவி வேண்டுமா? என நேரடியாகவே கேட்டனர்; பிரபல நடிகரின் பேரன் பேட்டி
Published on

புனே,

இந்தி திரையுலகில் பிரபல வில்லன் நடிகராக அறியப்படுபவர் அம்ரீஷ் புரி. தமிழில் நடிகர் ரஜினிகாந்த், மம்முட்டி நடித்த தளபதி படத்திலும் முக்கிய வேடத்தில், வில்லத்தனத்தின் புதிய பரிமாணம் வெளிப்படும் வகையில், நடித்து வரவேற்பு பெற்றார்.

இவரது பேரன் வர்தன் பூரி. 2019-ம் ஆண்டு யே சாலி ஆசிக் என்ற இந்தி படத்தில் நடித்து முதன்முதலில் திரையுலகிற்கு தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். பிரபல நடிகரின் பேரனாக இருந்தபோதும், திரை துறையின் கசப்பான அனுபவங்களை சந்தித்தேன் என அவர் கூறுகிறார்.

அவர் அளித்த பேட்டியின்போது, திரையுலகில் சிலர் என்னை அவர்களின் தேவைக்கு பயன்படுத்தி கொள்ள கூடிய சூழல் ஏற்பட்டது. அவர்கள், பலருடன் பரிச்சயம் வாய்ந்த, திரை துறையுடன் தொடர்பில் உள்ளவர்கள் போன்று தங்களை காட்டி கொண்டனர்.

ஒரு சிலர் என்னிடம் நேரடியாகவே பாலியல் உதவி வேண்டுமா? என கேட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினர். அவர்கள் என்னிடம், இவ்வளவு பணம் கொடு. பதிலுக்கு உங்களுக்கு இது கிடைக்கும் என்ற ரீதியில் பேசினர்.

ஆனால், அதன்பின்னரே அவருக்கு இயக்குனரை கூட தெரியாது என்பதும், திரை துறைக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதே தெரிந்தது என்று ஆச்சரியமுடன் கூறியுள்ளார்.

அவரது அறிமுக படத்திற்கு பின்பு, 3 படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளார். எனினும், கொரோனா பெருந்தொற்று உள்பட பல காரணங்களால் படம் தள்ளி போயுள்ளது.

தி காஷ்மீரி பைல்ஸ் படம் எடுத்த இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரியின் படம் ஒன்றில் நடிக்கவும் கடந்த 2022-ம் ஆண்டு வாக்கில் வர்தன் பூரி ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

எனினும், இந்த படம் பற்றி வெளியே பேச வேண்டாம் என வர்தன் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளார்.  இந்த படம் எடுப்பதற்காக பெருமை கொள்கிறேன் என அவர் (அக்னிஹோத்ரி) கூறினார் என்று தனது பேட்டியின்போது வர்தன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com