நீட் தேர்வு எதிர்ப்பு; நடிகர் சூர்யாவை கண்டித்து பா.ஜ.க. தீர்மானம்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக நடிகர் சூர்யாவை கண்டித்து பா.ஜ.க. இளைஞர் அணியின் மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீட் தேர்வு எதிர்ப்பு; நடிகர் சூர்யாவை கண்டித்து பா.ஜ.க. தீர்மானம்
Published on

சென்னை,

சென்னை தியாகராயர் நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பா.ஜ.க.வின் இளைஞர் அணியின் மாநில செயற்குழு கூட்டம் அதன் தலைவர் வினோஜ் பி செல்வம் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த இளைஞர் அணி தலைவர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொணடனர். கூட்டத்தில், நீட் தேர்வு, ஒளிப்பதிவு திருத்தச்சட்டம் ஆகியவற்றை எதிர்த்து பேசி வரும் நடிகர் சூர்யாவை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், மாணவர்களை குழப்பும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா உண்மைக்கு மாறான தகவலை பரப்புகிறார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வரும் மக்கள் நலத்திட்டம், சட்டங்களை உள்நோக்கத்துடன் சுய விளம்பத்திற்காக தொடர்ந்து எதிர்த்து வருகிறார்.

அவர் இத்துடன் இதனை நிறுத்தி கொள்ளாவிடில் பா.ஜ.க. இளைஞரணி சார்பில் சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வினோஜ் பி செல்வம் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com