ஜன நாயகனும் இல்லை; ஜன நாயகமும் இல்லை: சிபி சத்யராஜ்

"இன்று ஜனநாயகனும் இல்லை. இங்கு ஜனநாயகமும் இல்லை" என்று சிபி சத்யராஜ் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் கடந்த 5-ந் தேதி பரிந்துரை செய்தது.இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தணிக்கை வாரியம் தரப்பில் செய்யப்பட்ட மேல் முறையீட்டில், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. வழக்கின் விசாரணையும் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால், பொங்கலுக்கு ஜனநாயகன் ரிலீஸ் ஆக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் சிபி சத்யராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், "இன்று ஜனநாயகனும் இல்லை. இங்கு ஜனநாயகமும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார். ஜனநாயகன் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் திமுக அரசு மீது பாஜகவும், மத்திய பாஜக அரசு மீது திமுக கூட்டணிக் கட்சிகளும் மாறிமாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்துக்கும் தணிக்கைச் சான்றிதழ் தாமதிக்கப்பட்ட நிலையில், கடைசித் தருணத்தில் வழங்கப்பட்டு, இன்று திரையரங்குகளில் வெளியானது.






