அனிருத்திடம் பாடல் கேட்ட நெல்சன்... ஜெயிலர் படக்குழு வெளியிட்ட வீடியோ

ஜெயிலர் படத்தின் முதல் பாடல் குறித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்
அனிருத்திடம் பாடல் கேட்ட நெல்சன்... ஜெயிலர் படக்குழு வெளியிட்ட வீடியோ
Published on

சென்னை,

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். அந்த வீடியோவில் இயக்குனர் நெல்சன் இசையமைப்பாளர் அனிருத்திடம், 'பாட்டு தரேன்னு சொன்னீங்களே?' என்று கேட்பது போல் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Sun Pictures (@sunpictures) July 1, 2023 ">Also Read:

X

Daily Thanthi
www.dailythanthi.com