விமான பயணத்தில் மோசமான அனுபவம் - நடிகை நஸ்ரியா

வெளிநாட்டு விமானத்தில் பயணித்தபோது தனக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டதாக நஸ்ரியா தெரிவித்து உள்ளார்.
விமான பயணத்தில் மோசமான அனுபவம் - நடிகை நஸ்ரியா
Published on


தமிழில் தனுஷ் ஜோடியாக நய்யாண்டி, ஆர்யாவுடன் ராஜா ராணி, ஜெய்யுடன் திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நஸ்ரியா. மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தெலுங்கில் நானியுடன் இணைந்து நடித்த அடடே சுந்தராநிகி படம் கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் வெளிநாட்டு விமானத்தில் பயணித்தபோது தனக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டதாக நஸ்ரியா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''அந்த விமானத்தில் பணியாளர்கள் சேவை மோசமாக இருந்தது. விமானத்தில் பைகள் காணாமல் போய் உதவிக்கு அவர்களை அழைக்கும்போது கண்டு கொள்வது இல்லை. இனிமேல் எனது வாழ்க்கையில் அந்த விமானத்தில் பயணம் செய்ய மாட்டேன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com