

சென்னை,
திரிஷா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல நடிகைகள் தங்கள் உடலில் பச்சை குத்தி இருக்கும்நிலையில், சில நடிகைகள் அவ்வாறு செய்ததே கிடையாது. அதில் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனும் ஒருவர்.
ஆனால், இதுவரை அதில் இருந்து விலகி இருந்த கீர்த்தி சனோன், முதல் முறையாக பச்சை குத்தி அந்த பட்டியலில் இணைந்திருக்கிறார். அவரது கணுக்காலில் பறந்து கொண்டிருக்கும் ஒரு பறவையை பச்சை குத்தி இருக்கிறார்.
இதை அவர் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து, ''நான் இப்படி செய்வேன் என்று நினைத்ததே இல்லை.கண்களில் கனவுகளுடன் இருக்கும் எல்லோரும்...நீங்கள் பயப்படும் அந்த முடிவை எடுங்கள்..அது எளிதாக இருக்காது, ஆனால் நீங்கள் உங்களுக்கான இறக்கைகளைக் கண்டுபிடிப்பீர்கள், பறக்கக் கற்றுக்கொள்வீர்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
View this post on Instagram