

திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்ட சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்த திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை வடபழனியில் உள்ள இச்சங்கத்துக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட இருக்கும் இக்கட்டிடத்தில் வணிக வளாகம் மற்றும் திரையுலக பயன்பாட்டுக்குத் தேவையான அனைத்து நவீன வசதிகளும் உருவாக இருக்கிறது. இதற்காக மாயாபஜார் ஹப் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான நிதி திரட்டுவதற்காக, திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம் சார்பில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கின்றன. சென்னை, ஐதராபாத், குஜராத் ஆகிய நகரங்களிலும் சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலும் இந்த இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இதில் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஒன்றிணைந்து இலவசமாக இந்நிகழ்ச்சியை நடத்தித் தர முடிவு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சி டிசம்பர் மாதம் சென்னையில் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. இது தொடர்பாக முதல்வர் விஜய்யை சந்தித்து பேச உள்ளனர்.
இதன் அறிமுக நிகழ்வு சமீபத்தில் நடந்தது. இசை அமைப்பாளர்கள் கங்கை அமரன், யுவன் சங்கர் ராஜா, தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார் மற்றும் முன்னணி பாடகர் பாடகிகள் கலந்து கொண்டனர்.
முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், தேவா, அனிருத், யுவன்ஷங்கர் ராஜா உள்ளிட்டவர்களை ஒரே மேடையில் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது.