'மூக்குத்தி அம்மன் 2' வெளியான புதிய தகவல்

வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை சுந்தர் சி இயக்க உள்ளார்.
'மூக்குத்தி அம்மன் 2' வெளியான புதிய தகவல்
Published on

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தற்போது 'டாக்சிக், ராக்காயி' என்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு அம்மனாக நடித்திருந்த படம் 'மூக்குத்தி அம்மன்'. ஆர்.ஜே. பாலாஜி இயக்கி நடித்திருந்த இப்படம் நேரடியாக ஓ.டி.டியில் வெளியாகி இருந்தாலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் மூலம்தான் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஆர்.ஜே. பாலாஜி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் உருவாக உள்ளது. இந்த 2-ம் பாகத்திலும் நயன்தாரா தான் அம்மனாக நடிக்க இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் அறிவித்திருந்தது. பிரபல நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை இயக்க உள்ளார்.

இந்த நிலையில், இப்படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்த ஆண்டிலேயே தெடங்க உள்ளதாகவும், மேலும் இப்படம் சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com