லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளையொட்டி 'டிசி' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் 'தேவதாஸ்' என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கிறார்.
லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளையொட்டி 'டிசி' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
Published on

'மாநகரம்' படத்தை இயக்கி பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். அதை தொடர்ந்து 'கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார். இதற்காகவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

சமீபத்தில் ரஜினியை வைத்து 'கூலி' படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவில் வரவேற்பை பெறவில்லை. அதனை தொடர்ந்து, அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இதற்கிடையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'டிசி' என்ற படத்திலும் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் 'தேவதாஸ்' என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும், சந்திராவாக வாமிகா கபியும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், நடிகரும், இயக்குனருமான லோகேஷ் கனகராஜ் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், 'டிசி' படக்குழு லோகேஷ் கனகராஜுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து 'டிசி' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com