விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு...!

'வாரிசு' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு...!
Published on

சென்னை,

தெலுங்கின் பிரபல இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் விஜய் நடித்து வருகிறார். குடும்ப ரசிகர்களை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். வாரிசு படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், பாடல் வெளியாகவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

இந்த நிலையில், வாரிசு' படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ (பஸ்ட் சிங்கிள்) படக்குழுவால் கடந்த 3-ம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 30 விநாடி அளவில் இந்த ப்ரோமோ பாடல் வெளியாகியது. ரஞ்சிதமே... ரஞ்சிதமே எனத் தொடங்கும் அப்பாடலை விஜய் மற்றும் மானசி எம்.எம் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

எப்போதும் போல விஜய் இப்பாடலில் தாறுமாறான நடனத்தை கொடுத்திருக்கிறார் எனத் தெரிகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வாரிசு படத்தின் ரஞ்சிதமே... ரஞ்சிதமே... முழுப்பாடல் இன்று வெளியாக உள்ளது. விஜயின் குரலில் பாடல் உருவாகியுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், வாரிசு படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com