'ஜுமாஞ்சி: ஓபன் வேர்ல்டு' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

'ஜுமாஞ்சி: ஓபன் வேர்ல்டு' திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி வெளியாகிறது.
'ஜுமாஞ்சி: ஓபன் வேர்ல்டு' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
Published on: 

'ஜுமாஞ்சி: ஓபன் வேர்ல்டு' படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது, இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'ஜுமாஞ்சி: ஓபன் வேர்ல்டு'

ஹாலிவுட்டின் பிரபல சாகசத் திரைப்படத் தொடரான 'ஜுமாஞ்சி'யின் புதிய படமான 'ஜுமாஞ்சி: ஓபன் வேர்ல்டு' உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் டுவெய்ன் ஜான்சன், கெவின் ஹார்ட், ஜாக் பிளாக், கரேன் கில்லன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் மீண்டும் இணைந்துள்ளனர். முந்தைய பாகங்களை இயக்கிய இயக்குநர் ஜேக் காஸ்டன் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படம், நவீன 'ஜுமாஞ்சி' தொடரின் இறுதிப் பகுதியாக உருவாகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘ஜுமான்ஜி: வெல்கம் டு தி ஜங்கிள்’, 2019-ம் ஆண்டு வெளியான ‘ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல்’ ஆகிய படங்களின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியுள்ளது.

கடைசி சாகசம்

சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியானது. "ஒன் லாஸ்ட் கேம்" என்ற வாசகத்துடன் வெளியான இந்த டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முந்தைய படங்களைப் போல கதாபாத்திரங்கள் விளையாட்டுக்குள் செல்வதற்கு பதிலாக, இந்த முறை ஜுமாஞ்சி உலகமே நிஜ உலகிற்குள் நுழைந்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக கதை அமைந்துள்ளது. இதனால், முந்தைய பாகங்களைக் காட்டிலும் அதிக சாகசங்களும் நகைச்சுவையும் நிறைந்த படமாக இது உருவாகியுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 25-ல் ரிலீஸ்

'ஜுமாஞ்சி: ஓபன் வேர்ல்டு' திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி வெளியாகிறது. இதே காலகட்டத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள 'கிங்' திரைப்படமும் வெளியாக உள்ளது.மேலும், டிசம்பர் 18-ம் தேதி ‘ட்யூன்: பார்ட் த்ரீ’, ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ ஆகிய படங்களும் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளன. இதனால், இந்த ஆண்டு இறுதியில் சர்வதேசத் திரையரங்குகளில் பெரிய படங்களின் போட்டி அதிகரிக்க உள்ளது.

புதிய போஸ்டர் வெளியீடு

இந்த நிலையில், இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது, இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com