'பைசன்' படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு


பைசன் படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு
x
தினத்தந்தி 2 Oct 2025 6:43 PM IST (Updated: 6 Oct 2025 6:34 AM IST)
t-max-icont-min-icon

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படம் அக்டோபர் 17-ந் தேதி வெளியாகிறது.

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், தனுஷ் நடித்த 'கர்ணன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்', மற்றும் 'வாழை' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இதைத் தொடர்ந்து 'ஆதித்யா வர்மா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் துருவ் விக்ரமை வைத்து 'பைசன்' என்ற படத்தினை இயக்கியுள்ளார். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 17-ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது. இதற்கிடையில், இப்படத்திலிருந்து ‘தீக்கொளுத்தி’, ‘சீனிக்கல்லு’ என்ற பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.

அதனை தொடர்ந்து தற்போது, ‘பைசன்’ படத்தின் 4வது பாடலான "தென் நாடு" என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலின் வரிகளை மாரி செல்வராஜ் எழுதியுள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையில், சத்யன் இந்த பாடலை பாடியுள்ளார்.

1 More update

Next Story