'டெவில்' படத்தின் புதிய பாடல் வெளியீடு

'டெவில்' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.
'டெவில்' படத்தின் புதிய பாடல் வெளியீடு
Published on

சென்னை,

'சவரக்கத்தி' படத்தின் இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டெவில்'. இந்த படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாருதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ். இளையராஜா படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த படத்தின் மூலம் இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. 'டெவில்' திரைப்படம் நாளை (பிப்ரவரி 2) வெளியாக உள்ளது.

இந்த நிலையில் 'டெவில் 'படத்தின் புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'கடவுளுக்கு கோரிக்கை' என்ற பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது. மிஷ்கின் எழுதியுள்ள இந்த பாடலை பிரியங்கா பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com