ஜெயம் ரவியின் 'மிருதன் 2' படத்தின் புதிய அப்டேட்

ஜெயம் ரவியின் 'மிருதன் 2' படத்தை இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவியின் 'மிருதன் 2' படத்தின் புதிய அப்டேட்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.

கடந்த 2016-ம் ஆண்டு இவரது நடிப்பில் தென்னிந்திய மெழிகளில் முதன் முதலில் ஜாம்பி கதையை வைத்து வெளியான படம், 'மிருதன்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. சக்தி சவுந்தர் ராஜன் இயக்கிய இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜேடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்.

முதல் பாகம் வெளியாகி சுமார் 8 ஆண்டுகள் கழித்து மிருதன் படத்தின் 2-ம் பாகம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது.  'மிருதன்' மற்றும் 'டிக் டிக் டிக்' படங்களைத் தொடர்ந்து ஜெயம் ரவி மற்றும் சக்தி சவுந்தர் ராஜன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் 'மிருதன் 2'. இந்த படத்தின் படப்பிடிப்பு 2025-ம் ஆண்டு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், அர்ஜுனன் இயக்கும் 'ஜீனி' படத்தில் ஜெயம் ரவி தற்போது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com