கார்த்தியின் 'விருமன்' படத்தின் புதிய அப்டேட்

'மதுர வீரன்' பாடலின் வீடியோவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கார்த்தியின் 'விருமன்' படத்தின் புதிய அப்டேட்
Published on

சென்னை,

நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவம் பற்றி பேசும் விருமன் திரைப்படம் தென்தமிழகத்தைச் சுற்றி படமாக்கப்பட்டுள்ளது. அதிதி சங்கர் இந்த திரைப்படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் தைரியம் மிகுந்த பாசக்கார மதுரைப் பெண்ணாக நடித்துள்ளார்.

விருமன் திரைப்படத்தை சூர்யா - ஜோதிகா இணைந்து தங்கள் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நாளை ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் 'மதுர வீரன்' பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இது தனக்கு பிடித்தமான பாடல் என நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com