சந்தானம் நடித்துள்ள 'கிக்' படத்தின் புதிய அப்டேட்

நடிகர் சந்தானம் நடித்துள்ள 'கிக்' திரைப்படத்தின் 2-வது பாடலின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சந்தானம் நடித்துள்ள 'கிக்' படத்தின் புதிய அப்டேட்
Published on

சென்னை,

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கிக்'. இந்த படத்தில் தன்யா ஹோப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். 'கிக்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் 2-வது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை டீசர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. கானா பாலா எழுதியுள்ள இந்த பாடலை அந்தோணி தாசன் பாடியுள்ளார். அதன்படி 'கண்ணம்மா' என்ற இந்த பாடல் வருகிற 13-ந்தேதி மாலை 6.03 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com