'தளபதி 68' படத்தின் புதிய அப்டேட் வெளியானது..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'தளபதி 68' படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
'தளபதி 68' படத்தின் புதிய அப்டேட் வெளியானது..!
Published on

சென்னை,

'லியோ' திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். 'தளபதி 68' என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படம் குறித்த அப்டேட்டுகளை ரசிகர்கள் கேட்க தொடங்கிவிட்ட நிலையில், படத்தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து உள்ளது. அந்த வகையில், இன்று முதல் (அக்டோபர் 24) 'தளபதி 68' தொடர்பான அப்டேட்டுகள் வெளியாகும் என்று ஏ.ஜி.எஸ். நிறுவனம் தெரிவித்து உள்ளது.

மேலும் 2024-ம் ஆண்டு தங்களுக்கான ஒன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ள ஏ.ஜி.எஸ், 'தளபதி 68' படத்தின் பூஜை வீடியோ இன்று மதியம் 12.05 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளது. இந்த வீடியோவிலேயே படக்குழு மற்றும் நடிகர்கள் யார் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com