பார்த்திபன் இயக்கும் 'டீன்ஸ்' படத்தின் புதிய அப்டேட்

நடிகர் பார்த்திபன் குழந்தைகளை மையப்படுத்திய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
பார்த்திபன் இயக்கும் 'டீன்ஸ்' படத்தின் புதிய அப்டேட்
Published on

சென்னை,

இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தற்போது குழந்தைகளை மையப்படுத்திய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு 'டீன்ஸ்' (Teenz) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். பயஸ்கோப் யு.எஸ்.ஏ மற்றும் அகிரா புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. காவெமிக்அரி ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.சுதர்சன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் கதாபாத்திரங்களை தினமும் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்த உள்ளதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்திருந்தார். அந்த வகையில் முதல் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி, கிருத்திகா ஐயர், சாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வீடியோ ஒன்றை வெளியிட்டு பார்த்திபன் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து 13 நாட்களுக்கு 13 கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com