'இந்தியன் 3' படத்தின் புதிய அப்டேட்


New update of the movie Indian 3
x
தினத்தந்தி 26 Feb 2025 9:50 AM IST (Updated: 19 March 2025 3:56 PM IST)
t-max-icont-min-icon

'இந்தியன் 2' படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்தாலும், 'இந்தியன் 3' படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

சென்னை,

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'இந்தியன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியானது.

கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

'இந்தியன் 2' படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்தாலும், 'இந்தியன் 3' படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதன்படி, இந்தியன் 3 படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை நடத்துவதற்கு லைகா நிறுவனம் முன்வராததாகவும், இதனால், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்துவதற்கு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

1 More update

Next Story