சமந்தா நடிக்கும் 'யசோதா' படத்தின் புதிய அப்டேட்..!

நடிகை சமந்தா நடிக்கும் 'யசோதா' படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
சமந்தா நடிக்கும் 'யசோதா' படத்தின் புதிய அப்டேட்..!
Published on

சென்னை,

நடிகை சமந்தா நடிப்பில் தற்போது 'யசோதா' என்ற பான் இந்தியா திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகிறார்கள். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு மணிஷர்மா இசையமைத்துள்ளார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மார்த்தாண்டா கே வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'யசோதா' படத்தின் டீசர் வருகிற செப்டம்பர் 9-ஆம் தேதி மாலை 5:49 மணிக்கு வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com