ராம் சரணின் "பெத்தி" படத்திலிருந்து புதிய வீடியோ பாடல் வெளியீடு

ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை விஷால் மிஸ்ரா பாடியுள்ளார்.
Peddi Movie Poster
Published on

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெத்தி’. இந்த படத்தினை இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விளையாட்டை மையப்படுத்தி அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் ஜூன் 4ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், இந்த படத்திலிருந்து ‘ஹெல்லல்லல்லோ’ என்ற பாடல் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து தற்போது மாஸா மாஸா என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை விஷால் மிஸ்ரா பாடியுள்ளார். பாடல் வரிகளை அனந்த ஸ்ரீ ராம் எழுதியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com